உறங்கிக்கொண்டிருந்த மனைவி... திடீரென எழுப்பி ஓடும் ரயிலில் தள்ளிக் கொன்ற கணவன் - அதிர்ச்சிச் சம்பவம்

மும்பை அருகிலுள்ள வசாய் ரயில் நிலையத்துக்கு ஒரு பெண் தன் கணவன், இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர்கள் செல்லவேண்டிய ரயில் வராத நிலையில் ரயில் நிலையத்தில் தங்கினர். ரயில் நிலையத்தில் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் அனைவரும் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்ச்சில் உறங்க ஆரம்பித்தனர். அதிகாலை 4:10 மணிக்கு எழுந்த அந்தப் பெண்ணின் கணவர், உறங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை வேகமாக எழுப்பினார். அந்தப் பெண் உறக்கத்திலிருந்து எழுந்து என்னவென்று கேட்கும் முன்பாக அவரை அந்த நபர் ரயில்வே தண்டவாளத்தை நோக்கி இழுத்துச் சென்றார். இருவரும் சில விநாடிகள் பேசிக்கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்தது.

மனைவியை ரயிலில் தள்ளும் கணவன்

அப்போது எதிர்பாராத நேரத்தில் அந்தப் பெண்ணைப் பிடித்து அவரின் கணவர் ரயில் முன் தள்ளினார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை ரயிலில் தள்ளிவிட்டு, உறங்கிக்கொண்டிருந்த தன் இரண்டு குழந்தைகளையும் அவசரமாக எழுப்பிக்கொண்டு அங்கிருந்து அந்த நபர் புறப்பட்டுச் சென்றார்.

கொலை - கைது

அவர் தன் மனைவியை ரயில் தண்டவாளத்தில் பிடித்துத் தள்ளிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.

அவர் ரயில் மூலம் தாதர் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் கல்யாண் ரயில் நிலையத்திலும் அவர் தென்பட்டார். இந்த நிலையில், தனிப்படை போலீஸார் அந்த நபரை தானேவில் கைதுசெய்திருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/6IVoMYR

Post a Comment

0 Comments