தக்காளி காய்ச்சல்... 82 குழந்தைகளுக்குமேல் பாதிப்பு; மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுரை!

கொரோனா, குரங்கம்மை என உலகளவில் தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து `தக்காளி காய்ச்சல்’ என்ற புதிய நோய், இப்போது குழந்தைகளைத் தாக்கி வருவது அதிர்ச்சியளிக்கிறது.

தக்காளி காய்ச்சல்

இந்தியாவில் மே 5ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் தக்காளி காய்ச்சல் நோயின் தாக்கம் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, ஒடிசாவிலும் மற்ற மாநிலங்களிலும் பரவியது.

தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில்,

நாடு முழுவதும், 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பரவுகிறது. கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன. குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

தக்காளி காய்ச்சல்

தக்காளி காய்ச்சல் நோய், பரவும் தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் உள்ள குழந்தைகளைத் தொடக்கூடாது.

தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/6gs8e1W

Post a Comment

0 Comments