தமிழ்நாடு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள -161 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு


தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி GROUP- 5A இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC வெளியிட்டுள்ளது. 


இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: உதவிப் பிரிவு அலுவலர் - 74

பணி: உதவிப் பிரிவு அலுவலர் - 29

சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,34,200


பணி: உதவியாளர், தலைமைச் செயலகம் - 49

பணி: உதவியாளர் - 09

சம்பளம்: மாதம் ரூ.20,000 - 73,700


தகுதி: 

வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 40க்குள்ளும், பிற பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.


கட்டணம்:  

நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.


எழுத்துத் தேர்வு மையம்: 

சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும்.


எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 

தாள்-I பொதுத் தமிழ் 18.12.2022 அன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை.  

தாள்-II பொது ஆங்கிலம் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை.


விண்ணப்பிக்கும் முறை: 

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2022



மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/21_2022_Group_V_A_Notfn_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


Post a Comment

0 Comments