அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4,000 ரூபாய் ஓணம் போனஸ்..!

கேரளாவில் மிகச் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஓணமும் ஒன்று. இதற்கு அரசும் தன்னுடைய பங்களிப்பை வழங்கும் விதமாகப், பல ஆண்டுகளாகவே அரசு ஊழியர்களுக்கு ஓணம் போனஸ் வழங்கி வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தின் அறுவடை திருநாளான ஓணத்தை முன்னிட்டு, `அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4,000 ரூபாய் வரை வழங்கப்படும்’ எனக் கேரள அரசு அறிவித்துள்ளது.

ஓணம் கொண்டாட்டம்

``அரசு ஊழியர்களாக இருந்தும் போனஸ் பெறத் தகுதியில்லாதவர்களுக்கு, சிறப்பு விழா உதவித் தொகையாக 2,750 ரூபாய் வரை வழங்கப்படும். அதோடு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முன்பணமாக 20,000 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தொகையானது மாத தவணையாக வசூலிக்கப்படும்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களின் மாத ஓய்வூதியத்துடன் கூடுதலாக 1000 ரூபாயும், அனைத்து பகுதி நேர ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பள காசோலையுடன் முன்பணமாக 6000 ரூபாய் வழங்கப்படும்.

ஓணம் கொண்டாட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுநோய்க் காரணமாகக் கொண்டாட்டங்கள் குறைந்து காணப்பட்டது. கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தைப் போல, இந்த ஆண்டு திருவிழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட மாநிலம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர். பணப்பற்றாக்குறையில் உள்ள மாநில அரசு ஓணம் பண்டிகைக்காகக் கூடுதலாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும்'' என நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறியுள்ளார்.

இதேபோல கேரள மாநிலத்தின் தனியார்த் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், ஒரு மாத சம்பளத்தை ஓணம் போனஸாகப் முன்கூட்டியே பெறத் தகுதியுடையவர்கள் என்ற பொதுவான விதிமுறை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/Sw8meR0

Post a Comment

0 Comments