சட்டசபைத் தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோருடன் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்தராஜனும் கோவையில் போட்டியிட முயற்சி செய்து வந்தார்.
கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளை பாஜக கேட்டது. இவற்றில் 2 தொகுதிகளாவது பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வானதி சீனிவாசன், அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவு தொகுதியில் சீட் எதிர்பார்த்து பணியாற்றிய வசந்தராஜன் அதிருப்தியடைந்தார். அவரின் ஆதரவாளர்களும் விரக்தியடைந்தனர்.
இதுகுறித்து பாஜக கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். தங்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்துவிட்டதாக ஆதங்கப்பட்டனர்.
ஒருகட்டத்தில், 'வேண்டும்.. வேண்டும்.. கிணத்துக்கடவு வேண்டும்' என்ற கோஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்கிற முழக்கத்துடன் ஈச்சனாரி பகுதியில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
''நாங்கள் எப்படி தேர்தல் பணி செய்ய முடியும்'' என்று கேள்வி எழுப்பினார். அப்போது திடீரென தொண்டர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
அவரை காவல்துறையினர் மற்றும் நிர்வாகிகள் மீட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களை அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சமாதானப்படுத்தினார்கள். பாஜக வசந்தராஜன் ஆதராவளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுகவினரிடம் அதிர்சியை ஏற்படுததியது.
from India News https://ift.tt/1REb2aU
0 Comments