கேள்வித்தாள் அநீதி... தேர்வு நேர மன உளைச்சல்... தொடரும் 'நீட்' தற்கொலைகள்!
"பன்னிரெண்டு வருசம் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தவ என்னோட மவ... நீட்'னு கொண்டுவந்து இப்படி படிச்சா பிள்ளைகள பாடையிலே ஏத்துறியலே... சாமி..., இதுக்கு ஒரு முடிவே கெடையாதா...?!"
- பெரம்பலூர் மாவட்டத்தில், ' 'நீட்' தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் என்னாவது..?' என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயாரின் கதறல் வார்த்தைதான் இது.
மருத்துவம் படிக்க விரும்பும் மாநில மாணவர்களின் மன நிலையைச் சீர்குலைத்து, அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளும் 'நீட்' தேர்வின் பாரபட்சமான போக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அநீதியான கேள்வித்தாள் முறையும், பெண் பிள்ளைகளின் தன்மானத்தை சீண்டும் விதமான தேர்வு நேர கெடுபிடிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், எதையுமே கண்டுகொள்ளாமல் கடந்து போகிறது மத்திய அரசும், இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையும்.
வழக்கம்போல் ஒவ்வொரு ஆண்டு நீட் தேர்வின்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துக்கிளம்புவதுண்டு. கடந்த ஆண்டில் பணம் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்து தேர்வை எழுத வைத்த மோசடி என்றால், இந்த ஆண்டு கேரளாவில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடை ஹூக் மெட்டலில் இருப்பதாக கூறி, அதனைக் கழற்றிப் போட்டுவிட்டுத் தேர்வு எழுதச் செல்லுங்கள் எனக் கூறிய தேர்வு கண்காணிப்பாளர்களின் குரூரம்.
மாணவிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், வழக்கம்போல் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என முதலில் மறுத்த தேசிய தேர்வுகள் முகமை, பின்னர் அது குறித்து விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதற்கு முன்னதாகவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கல்வித்துறை மந்திரி பிந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் ஏற்கெனவே 5 பேரை கைது செய்திருந்த நிலையில், தேர்வு பார்வையாளர் மற்றும் மைய ஒருங்கிணைப்பாளர் என மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் என்றால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் விதமான கேள்வித்தாள் தயாரிப்பு. நடந்து முடிந்த தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 162 கேள்விகள் மட்டுமே தமிழகப் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கேள்விகள் சிபிஎஸ்இ போன்ற கல்வி வாரியம் பின்பற்றும் NCERT பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் ஒரு மாணவர் முழுமையாக தன்னுடைய புத்தகங்களைப் படித்திருந்தாலும்கூட மீதமுள்ள 38 கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. இது மாபெரும் அநீதி அல்லவா?
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர் 720 மதிப்பெண்களுக்குப் பதில் எழுதும் நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவரோ 648 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வே எழுத முடியும். அதாவது தேர்வு எழுதும் முன்னரே 10% மதிப்பெண்களை இழக்கும் நிலை. மருத்துவ படிப்புக்கு லட்சக்கணக்கானோர் முட்டி மோதும் நிலையில், ரேங்கில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் எவ்வளவு முக்கியம் என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். ஆனால், தெரிந்தே இத்தகையதொரு அநீதி அரங்கேறுகிறது.
அடுத்ததாக ஆள் மாறாட்டம். தென் மாநிலங்களில் காட்டப்படும் அளவுக்கான கெடுபிடிகள் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் காணப்படுவதில்லை. அதனால்தானோ என்னவோ, அங்கே ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல மோசடிகள் அரங்கேறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த நீட் தேர்வின்போது நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக டெல்லி, ஹரியானாவில் 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் எழுதியது எத்தனை பேரோ..?
இத்தகைய அநீதிதான், நீட் தேர்வு பயத்தில் தமிழக மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள துயரம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான விரிவான செய்திகளைப் படிக்க க்ளிக் செய்க...
சின்னசேலம் போராட்டம்: எப்போது கலவரமாக, சூறையாடலாக மாறியது?!
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டத்திலும் இருந்தும் கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். இந்த போராட்டம் வழக்கமான ஒன்றாகதான் இருக்கும் என்று பலரும் எண்ணினர். அதன்படி, போராட்டம் நடைபெறவிருந்த நெடுஞ்சாலையில் மட்டும் 350 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி, 17-ம் தேதி காலை 9 மணிக்குப் போராட்டம் மிக திவிரமாக மேற்கொள்ளப்பட்டது. போராட்டக்காரர்கள் பள்ளியை நோக்கி நகர ஆரம்பித்ததால், அவர்களைக் குறைவான எண்ணிக்கையிலிருந்த போலீஸால் தடுக்க முடியவில்லை. இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், சின்னசேலம் போராட்டம் எப்போது கலவரமாக, சூறையாடலாக மாறியது என்பது குறித்த விரிவான செய்தியைப் படிக்க க்ளிக் செய்க...
'அக்னிபத்' ஆள்சேர்ப்பும்... சாதி சர்ச்சையும் - பின்னணி என்ன?!
மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிவித்ததிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. வட மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இளைஞர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி இந்தத் திட்டத்துக்கான ஆள்சேர்ப்பை சமீபத்தில் தொடங்கியது இந்திய ராணுவம். இந்த நிலையில், தற்போது அக்னிபத் திட்டம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது.
ஒருநாள் போட்டிகள் இனி அவ்வளவுதானா? ஒரு விரிவான அலசல்!
ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்களால் பாதிக்கப்படுவது டெஸ்ட் கிரிக்கெட் என்று பலரும் பேசிவரும் வேளையில் உண்மையாகவே பாதிக்கப்படுவது என்னவோ ஒருநாள் ஃபார்மர்ட் கிரிக்கெட் தான். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மாபெரும் விளையாட்டாக மாறியது 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னரே. அன்று தொடங்கி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல மறக்கமுடியாத ஒருநாள் போட்டிகள் நடந்துகொண்டேதான் இருந்தன. இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் ஒருநாள் கிரிக்கெட் அடையாளம் தரும் பல நினைவுகளை கொடுத்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.
ஐஸ்வர்யா ராயைச் சந்திக்க மறுத்த ஜெயம் ரவி! -விகடன் பிரஸ்மீட் எக்ஸ்க்ளூஸிவ்
"பொன்னியின் செல்வன்' செட்லயே நீங்கதான் ரொம்ப அழகா இருந்தீங்கன்னு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். உங்க பார்வையில யார் ரொம்ப அழகா இருந்தாங்க அந்தத் தோற்றத்துல?" -சுதர்சன் காந்தி
"ரவியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவர் ஃப்ரேம்ல எல்லோரும் ரொம்ப அழகாதான் இருப்பாங்க. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கி வெச்சிருக்கார். உண்மையாவே அவர் ரவிவர்மன்தான். அவர் அப்படிச் சொல்லியிருக்கார்னா ரொம்ப சந்தோஷம். நான் ஐஸ்வர்யா ராயின் பெரிய ரசிகன். ஆனால்..."
எரிமலையான மனைவி... போர் வெறியர்களுக்கு ஒரு புதிய பாடம்!#AppExclusive
அமெரிக்க விமானப் படையில் அவன் ஒரு வீரன். இரண்டாம் உலகப் பெரும் போரில் அவனுக்கு இடப்பட்ட கட்டளையை இனிதே முடித்ததற்காக அரசாங்கம் அவனுக்கு உயர்ந்த விருது வழங்கியது; பல்லாயிரம் டாலர் பணமுடிப்பும் வழங்கியது. அதற்கு முன்னரே அவனது பெயர் உலகச் செய்தித் தாள்கள் அனைத்திலும் வந்துவிட்டது. அமெரிக்க ஏடுகளோ அவனை வாழ்த்தி வாழ்த்தி வானத்திலேயே கொண்டுவைத்துவிட்டன. பெற்ற பட்டத்தோடும் பண முடிப்போடும் அந்த வீரன் பீடுநடை போட்டு இல்லத்துக்கு வந்தான். தன் அன்பு மனைவி தன்னை எப்படி எல்லாம் வரவேற்பாள் என்று கற்பனை செய்துசெய்து, அவனது இதயம் பூரித்துப்போய் இருந்தது. 'டக்... டக்’ என்ற பட்டாளத்து வீரனின் பூட்ஸ் ஒலி கேட்டு அந்த மங்கை வாசலுக்கு விரைந்தோடி வந்தாள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/FsB031C
0 Comments