திமிங்கிலத்தின் வாந்தியில் 'மிதக்கும் தங்கம்' எனக் குறிப்பிடப்படும் அம்பர்கிரிஸ்ஸை (Ambergris) கடத்த முயன்ற வைபவ் ஜனார்தன் காலேகர் என்பவரை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் புதன்கிழமை (ஜூலை 20) கைது செய்திருக்கின்றனர்.
ரூ.2.6 கோடி மதிப்புடைய அம்பர்கிரிஸ்ஸை போலீஸார் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றி உள்ளனர். வைபவ் ஜனார்தன் காலேகர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் மும்பைக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்கத்தை விட அதிக விலை மதிப்புள்ள 'அம்பர்கிரிஸ்' கடத்துதல் என்பது இது முதல் முறை அல்ல. கடந்த வருடம் தூத்துக்குடி, இலங்கை போன்ற இடங்களிலிருந்துகூட இந்தத் திமிக்கலத்தின் வாந்தியிலிருந்து எடுக்கப்படும் அம்பர்கிரிஸ்ஸை கடத்த முயற்சி செய்திருக்கின்றனர்.
அம்பர்கிரிஸ் என்பது 'திமிங்கில வாந்தி', 'மிதக்கும் தங்கம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இவை திமிங்கிலத்தின் செரிமான அமைப்பில் உருவாகி வாய் வழியாக வெளியேறும் ஒரு வகை திடக்கழிவு. இது வெள்ளை, சாம்பல் மற்றும் கறுப்பு நிறங்கள் கலந்து இருக்கும்.
திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை திமிங்கிலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றி ஒரு சிறப்புத் திரவத்தைத் திமிங்கிலத்தின் செரிமான அமைப்பு உற்பத்தி செய்கிறது. அதுதான் அம்பர்கிரிஸ்.
இது நறுமணப் பொருள்கள் மற்றும் பாலியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர்கிரிஸ்ஸை திமிங்கிலங்கள் வாந்தியெடுப்பதன் மூலம்தான் வெளியேற்றுகிறது. ஒரு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கும் என்று மீன்வள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/8Uqcv4j
0 Comments