தாவூத் கூட்டாளியுடன் தொடர்பு: மாஜி மத்திய அமைச்சருக்குச் சொந்தமான சொத்து பறிமுதல்!

முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமானவருமான பிரபுல் பட்டேலுக்கு மும்பை ஒர்லியில் அடுக்குமாடி வர்த்தகக் கட்டடம் ஒன்று இருக்கிறது. இந்தக் கட்டடத்தை பிரபுல் பட்டேல் நிறுவனம் கட்டியது. சி.ஜே ஹவுஸ் என்ற அந்தக் கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளி இக்பால் மிர்ச்சிக்கு சில குடியிருப்புகள் இருந்தன. அவற்றை இடித்துவிட்டு புதியக் கட்டடம் கட்டப்பட்டபோது அந்தக் கட்டடத்தில் இக்பால் மிர்ச்சி குடும்பத்துக்கு இரண்டு மாடிகள் ஒதுக்கப்பட்டன. அவை இக்பால் மனைவி, அவர் இரண்டு மகன்கள் பெயரில் இருக்கிறது. அந்த இரண்டு மாடிகளையும் ஏற்கெனவே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். இக்பால் மிர்ச்சி குடும்பம் இப்போது வெளிநாட்டில் இருக்கிறது. அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தக் கட்டடத்தை கட்ட டி.எச்.ஃஎப்.எல் நிறுவன உரிமையாளர்கள் கபில், தீரஜ் கடனுதவி செய்திருந்தனர். அவர்கள் ஏற்கனவே நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டனர்.

பிரபுல் பட்டேல்

இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். 2021-ம் ஆண்டும் பிரபுல் பட்டேல் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக சர்ச்சைக்குறிய அந்தக் கட்டடத்தில் பிரபுல் பட்டேலுக்குச் சொந்தமான 4 மாடிகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். இப்போது பிரபுல் பட்டேல்மீது கவனத்தை செலுத்தியிருக்கிறது அமலாக்கப் பிரிவு.



from தேசிய செய்திகள் https://ift.tt/fC8QJpk

Post a Comment

0 Comments