பெங்களூருவில் மூன்றாவது ரயில் முனையமாக உருவாகியிருக்கும் 'சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம்' வழக்கமான ரயில் சந்திப்பு நிலையம் போல இல்லாமல் விமான நிலையம் போல அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முதல் (ஜூன் 6) இதன் செயல்பாடு தொடங்கியிருக்கும் நிலையில் இதில் உள்ள வசதிகளை வேறு எந்த ரயில் நிலையத்திலும் காண முடியாது. பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியோடு புதிய ரயில் முனையத்தைப் பார்வையிட்டனர்.
இந்தத் திட்டத்திற்காக 314 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தைப் போலவே காட்சியளிக்கும் நுழைவாயில், பயணிகள் காத்திருக்கும் பொதுத்தளம், ரியல்-டைம் பேசஞ்சர் தகவல் அமைப்பு, விஐபி காத்திருப்பு அறை, உணவுக்கான பிரத்யேக இடம் என இதன் வசதிகளைப் பட்டியலிடலாம்.
குளிரூட்டப்பட்ட இந்த ரயில் முனையம் அதிநவீன வசதிகள் தாண்டி சோலார் ரூப்டாப் பேனல்ஸ், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் என அசத்தும் வகையில், இயற்கைக்கு உகந்த வடிவமைப்பில் உருவாகியிருக்கிறது. இந்த ரயில் முனையம் பெங்களூருவில் பனஸ்வாடிக்கும் பையப்பனஹள்ளிக்கும் இடையில் 4200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.
250 நான்கு சக்கர வாகனங்கள், 900 இருசக்கர வாகனங்கள் அளவுக்கு பார்க்கிங் வசதி உண்டு. 32 இணை ரயில் சேவைகள் இங்கிருந்து திட்டமிடப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் மூன்று சேவைகள் தொடங்கப்பட உள்ளன. வாரத்திற்கு மூன்று நாள்கள் எர்ணாகுளம் செல்லும் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. Kochuveli Bi-Weekly Humsafar Express ரயில் சேவை ஜூன் 10 முதல் இயக்கப்படவுள்ளது. இதே போல பெங்களூரு முதல் பாட்னா வரை செல்லும் weekly Humsafar Express ரயில்கள் ஜூன் 11 முதல் இயக்கப்படவுள்ளன.
from தேசிய செய்திகள் https://ift.tt/VWDA9tr
0 Comments