கர்நாடகா: ``எங்கள் கூட்டணி ஆட்சி வீழக்காரணமே சித்தராமையாதான்..!" - குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``என்னுடைய தலைமையிலான ஜே.டி(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சியால் நான் மிகவும் விரக்தியடைந்து போனேன்... அதனால்தான் கூட்டணியை உடைக்க அனுமதித்தேன். அதற்குக் காரணம் சித்தராமையாதான். அவர் தனது சொந்த கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டார். நான் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தைச் செயல்படுத்துவதையே எனது முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தேன். அதைச் செயல்படுத்த நான் மிகவும் சிரமப்பட்டு இலக்கை அடைந்தேன்.

சித்தராமையா

ஆனால், ஜே.டி(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க சித்தராமையா பா.ஜ.க-வுடன் கைகோர்த்துவிட்டார். எனது அரசைக் கவிழ்க்கச் சதித்திட்டம் தீட்டப்படுவதை அறிந்ததும் மிகவும் வெறுப்பாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, காங்கிரஸ், ஜே.டி(எஸ்) எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் பேரம் பேசி பல மாதங்கள் எனது அரசைக் கவிழ்க்க ஒத்திகை பார்த்தார்கள். இறுதியாக 2019 -ல் 17 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தபோது, அவர்களின் சதித்திட்டம் வெற்றிபெற்றது. சதியால் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே எனது அரசைக் காப்பாற்றும் ஆர்வத்தை இழந்துவிட்டேன்.

பாஜக

எனவே, என் அரசின் வீழ்ச்சியை ஒப்புக்கொண்டு அமெரிக்கா சென்றேன். ஜே.டி(எஸ்), காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கவர்ந்திழுக்கும் பா.ஜ.க-வின் முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பா.ஜ.க நிர்வாகிகள் இப்போது ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவா உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்கள்" என்றார்



from தேசிய செய்திகள் https://ift.tt/yHQMEpX

Post a Comment

0 Comments