உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு, ராஜ்க்கு இருந்த தாம்பத்ய குறைபாட்டுக்கு நண்பர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அவர்களில் சிலர் தாம்பத்திய உறவுக்கு வயாக்ரா மாத்திரை எடுத்துக்கொள்ளும்படி ஆலோசனை வழங்கினர். இதனை கேட்டு ராஜ் அடிக்கடி வயாகரா மாத்திரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் அளவுக்குச் சென்றார்.
அதாவது, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட நான்கு மடங்கு அதிகமாக, 200 மிகி அளவு வரை எடுத்துக்கொண்டார். இதனால் ராஜ்க்கு ஏற்பட உடல்நலக் குறைவுகள், பிரச்னைகளால் அவரின் மனைவி அவரை பிரிந்து தன் பெற்றோரிடம் சென்றார். ராஜ்ஜின் பெற்றோர் சமாதானப்படுத்தி அப்பெண்ணை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், ராஜ்க்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் தொடர்ச்சியான விரைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜ் மனைவி மீண்டும் தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ராஜ்க்கு டாக்டர்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து அவரது வலியை குணப்படுத்திவிட்டனர். ஆனால் அவருக்கு வாழ்நாள் முழுக்க இனி பிறப்புறுப்பில் விரைப்புத்தன்மை குறையாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைப்புத் தன்மையை மறைக்க இறுக்கமான துணியை கட்டிக்கொள்ளவேண்டும், அல்லது இறுக்கமான உள்ளாடை அணிந்து கொள்ளவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். வழக்கமான வாழ்க்கை வாழ முடியும். ஆனாலும் வாழ்க்கை முழுக்க இந்தப் பிரச்னை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/SEjrXeq
0 Comments