நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு; விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நுபுர் ஷர்மாவுக்கு போலீஸ் சம்மன்

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, கடந்த வாரம் ஊடக விவாத நிகழ்ச்சியில், இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது, இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான், வளைகுடா நாடுகள் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தன. அதுமட்டுமல்லாமல், இத்தகைய கருத்துக்கு இந்தியா பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்திவருகின்றன. இதன் எதிரொலியாக குவைத் நாட்டிலுள்ள அங்காடியொன்றில், இந்தியத் தயாரிப்புகள் விற்பனை அலமாரியிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன.

நுபுர் சர்மா

இந்தியாவுக்கு வெளியிலிருந்து, இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களும், ``நுபுர் ஷர்மாவைக் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது மட்டும் போதாது, சிறைக்கு அனுப்பவேண்டும்" என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நுபுர் ஷர்மாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியிருக்கிறது. அதில் நுபுர் ஷர்மா, வருகிற ஜூன் 22-ம் தேதி நேரில் ஆஜராகி, நபிகள் நாயகம் குறித்த பேச்சுக்கு விளக்கம் தரவேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

மூடிவைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தயாரிப்புகள்

இந்த விவகாரத்தில் கடந்த ஞாயிறு அன்று, செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தும், ஊடக நிர்வாகியான நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியும், பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது.



from தேசிய செய்திகள் https://ift.tt/AZUGnTB

Post a Comment

0 Comments