நடிகர் சல்மான் கான் தனது குடும்பத்தோடு மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். சல்மான்கான் படங்களில் நடித்து வருவதோடு தொண்டு நிறுவனம் மூலம் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். சல்மான் கானின் தந்தை சலீம் கான் தினமும் நடைபயிற்சிக்காக பாந்த்ரா கடற்கரைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சென்று சென்றுவிட்டு அங்குள்ள ஒரு இருக்கையில் வழக்கமாக அவருவது வழக்கமாகும்.சலீம் கானுடன் அவரின் பாதுகாப்புக்கு இரண்டு பாதுகாவலர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது சலீம் கான், வழக்கமாக அமரும் இருக்கையில் கடிதம் ஒன்று இருப்பதை பாதுகாவலர் ஒருவர் பார்த்தார்.
அக்கடிதத்தில் சல்மான் கான், சலீம் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. ``பாடகர் சித்து மூஸ்வாலா நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து உடனே பாந்த்ரா போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சலீம் கானிடம் புகார் பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் பஞ்சாப்பில் பாடகர் சித்து படுகொலைக்கு காரணமாக இருந்த லாரன்ஸ் பிஸ்னோய் நடிகர் சல்மான்கானுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். எனவே பஞ்சாப்பில் சித்து கொலை செய்யப்பட்டவுடன் சல்மான் கானின் இல்லத்திற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது உண்மையிலேயே சல்மான் கானுக்கு மிரட்டல் வந்திருக்கிறது. பிஸ்னோய் தற்போது திகார் சிறையில் இருக்கிறார். டெல்லி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த போது, தனது ஆட்கள் தான் பாடகர் சித்துவை கொலை செய்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார். பிஸ்னோய் ஜெய்ப்பூரில் வைத்து சல்மான்கானை கொலை செய்வேன் என்று முன்னர் தெரிவித்திருந்தான். பிஸ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதும் ஒரு வகை மான்களை சல்மான் கான் ராஜஸ்தானில் வேட்டையாடியதால் லாரன்ஸ் பிஸ்னோய் இந்த மிரட்டலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/7f2LUrG
0 Comments