மும்பை: அதிகரிக்கும் கொரோனா - பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்களுக்கு பாசிட்டிவ்! 4வது அலையா?

மும்பையில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான நடிக்கும் 'ஜவான்' பட அறிவிப்பு வெளியானதையடுத்து அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், அவருக்கு இத்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. தொற்று காரணமாக ஷாருக்கான் படப்பிடிப்புகளை ஒத்தி வைத்துவிட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கார்த்திக் ஆர்யன்

ஏற்கெனவே நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயும் கொரோனா தொற்று காரணமாக தனக்கு நடக்க இருந்த அறுவை சிகிச்சையை ஒத்தி வைத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதோடு எதிர்க்கட்சித்தலைவர் தேவேந்திர பட்நாவிஸுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் கார்த்திக் ஆர்யன், ஆதித்ய ராய் கபூர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இது தவிர நடிகை கத்ரீனா கைஃப்பிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அபுதாபியில் நடந்த IIFA திரைப்பட விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இதில் கத்ரீனாவின் கணவர் விக்கி கௌசலுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்திருப்பது குறி்ப்பிடத்தக்கது. அதோடு விஜய் சேதுபதி நடிக்கும் 'Merry Christmas' படத்தின் படப்பிடிப்பிலும் கத்ரீனாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், தற்போது அவர் தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மும்பையில் பாந்த்ராவை உள்ளடக்கிய பகுதிகளில் இருக்கும் ஸ்டூடியோக்களில் பார்ட்டி நடத்தவேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. யாராவது உத்தரவை மீறி பார்ட்டி நடத்தினால் தங்களுக்குத் தகவல் கொடுக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கத்ரீனா கைஃப்

கொரோனா தொற்று யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர்களுடன் பணியாற்றிய மற்றவர்களும் சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பையில் கொரோனா 4வது அலை பரவக்கூடும் என்று மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

"இதற்காக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். முகக்கவசத்தை அரசு இன்னும் கட்டாயமாக்கவில்லை, இது குறித்து விவாதித்து வருகிறோம். அதே சமயம், மக்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/SRE0fhi

Post a Comment

0 Comments