கர்நாடகாவைச் சேர்ந்த 45 வயது மனிதரின் வாயிலிருந்து கிருஷ்ணர் வெளியே வந்துள்ளார். இதற்காக பல பேர் போராடினர். எதுவும் மேஜிக் என அதிசயித்து போகாதீர்கள், என்ன நடந்தது என முழுமையாகப் பார்ப்போம்.
45 வயது மனிதரின் தொண்டையிலிருந்து கிருஷ்ணர் சிலையை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர் மருத்துவர்கள். கர்நாடக மாநிலம் பெலஹாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு தொண்டை வலியுடன் எதையும் விழுங்க முடியவில்லை, மூச்சுவிட முடியவில்லை என்கிற உடல் உபாதைகளுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர் சென்றார். அவரைச் சோதித்த மருத்துவர்கள் தொண்டையில் உலோக பொருள் ஒன்று சிக்கியிருப்பதை 'Endoscopy' மூலம் கண்டறிந்தனர்.
அந்த உலோக பொருள்தான் கிருஷ்ணர் சிலை. கிருஷ்ணர் சிலையை அவர் ஏன் விழுங்கினார் என்பதைக் கேட்ட போது அவரது பழக்கம் ஓன்று தெரிய வந்திருக்கிறது. வழிபாட்டுக்காக புனித நீர் வைத்திருக்கும் பாத்திரத்தில் இந்தச் சிலையைப் போட்டு வைத்திருப்பாராம். நீர் அருந்தும் போது சிலையும் அவரது வாய்க்குள் விழுந்திருக்கிறது.
இந்த அறுவை சிகிச்சையை மிகக் கவனமாகச் செய்த மருத்துவர்கள் வெற்றிகரமாகச் சிலையை வெளியே எடுத்துள்ளனர். கிருஷ்ணரின் கால், உணவு குழாய்க்குள் நீட்டிக் கொண்டு இருந்ததை அகற்றுவதுதான் சவாலான ஒன்றாக இருந்ததாம். இப்போது அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/te4DbBC
0 Comments