புதிய மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் - எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து பிரித்து கோனசீமா(Konaseema) என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அம்மாவட்டத்திற்கு டாக்டர். பி. ஆர் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என பட்டியலின அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஆந்திர அரசு கடந்த மே 18 -ம் தேதி அன்று மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோனசீமா பரிரக்ஷனா சமிதி, கோனசீமா சாதனா சமிதி மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் மே 24-ல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையில் முடிந்தது. இதில் போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களைக் கல்லெறிந்தும், ஆளுங்கட்சி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்தும் சேதப்படுத்தினர். இந்த வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தது மட்டுமன்றி அமலாபுரம் டி.எஸ்.பி. மாதவ் ரெட்டி மயக்கமடைந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி

கோனசீமா மாவட்ட எஸ்.பி.சுப்பா ரெட்டிக்கு தலையில் கல்லடிப்பட்டு காயம் ஏற்பட்டது. அத்தகைய மோசமான சூழலில் போலீஸார் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு போராட்டக்காரர்களைக் கலைத்தனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட பெரும்பாலான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று ஜூன் 24 -ம் தேதி அன்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்காக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத இருக்க அமலாபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது..

அம்பேத்கர்

இது குறித்து ஆந்திர மாநில அரசின் ஆலோசகர்(பொது விவகாரங்கள்) சஜ்ஜாலா ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில் ``மக்கள் தொகை மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கைகளைக் கவனமாகப் பரிசீலித்த பின்னரே மாவட்டத்தின் பெயரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. மாநில அரசு தன் முடிவில் உறுதியாக இருக்கிறது. அதன்படி இன்று அதிகாரப்பூர்வமாக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மறுபெயரிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/JyUGxg7

Post a Comment

0 Comments