நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி... சிவசேனா தலைவர்களை கொலைசெய்ய தாவூத் இப்ராஹிம் தனிப்படை?

மும்பையில் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சி தாவூத் கூட்டாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்தது. இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் கிடைத்த முக்கிய தகவலின் அடிப்படையில், தாவூத் இப்ராஹிம் சகோதரியிடமிருந்து சட்டவிரோதமாக நிலம் வாங்கிய தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தற்போது மீண்டும் இன்று அதிகாலையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பை முழுவதும் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 20 இடங்களில் ரெய்டு நடத்தியிருக்கின்றனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரியல் எஸ்டேட் மேனேஜர்கள், ஹவாலா ஆபரேட்டர்களுக்கு எதிராக இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. மும்பையின் பரேல், சாந்தாகுரூஸ், கோரேகாவ் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு ரெய்டு நடத்தப்பட்டது.

சோட்டாசகீல்

இந்தச் சோதனையில், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது ஆட்கள் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

துப்பாக்கியுடன் புறப்பட்ட தாவூத் கூட்டாளிகள்?

இந்தச் சோதனை தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்ஸி அதிகாரிகள், ``மும்பையில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை வெடிகுண்டு, துப்பாக்கி மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை செய்வதற்காக தாவூத் இப்ராஹிம் தனிப்படையை அமைத்திருக்கிறான். இதில் தாவூத் இப்ராஹிம் குறிவைத்துள்ளவர்கள் பட்டியலில் சிவசேனா தலைவர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த திட்டத்துக்காக தாவூத் இப்ராஹிம், தனது கூட்டாளி சோட்டாசகீல் மூலம் துப்பாக்கியால் சுடுவதில் மிகவும் கைதேர்ந்த இரண்டு பேரை அனுப்பியிருக்கிறான்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

டெல்லி, மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் போன்ற சம்பவங்களை நடத்தி வன்முறையை ஏற்படுத்தவும் தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகுறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/xugdVAP

Post a Comment

0 Comments