மலையாள நடிகர் விஜய் பாபு மீது பிரபல நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து கொச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு மது உள்ளிட்ட போதை பொருட்கள் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர் என அந்த நடிகை கூறியிருந்தார். புகாரளித்து சுமார் 10 நாட்கள் ஆன நிலையில் நடிகர் விஜய்பாபுவை கைது செய்வதற்காக போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு விஜய் பாபு மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நடிகைகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். விஜய் பாபு அம்மா அமைப்பினுடைய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். விஜய் பாபுவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், அல்லது பதவி இறக்கம் செய்ய வேண்டும் என ஸ்வேதா மேனன் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் விஜய்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று செயற்குழுவில் ஒரு பகுதியினர் கருத்து தெரிவித்திருந்தனர்.
விஜய் பாபு மீது நடவடிக்கை எடுத்தால் அவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மீதான விசாரணை, அவருக்கு பாதகமாக அமையும் என சிலர் கூறியிருந்தனர். அதேசமயம், விஜய்பாபு நடிகர் சங்கத்துக்கு இ மெயிலில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் தன் மீதான குற்றச்சாட்டை நிருபிக்கும் வரை தன்னை செயற்குழுவில் இருந்து நீக்கி வைக்கும்படி விஜய் பாபு குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த கடிதத்தின் அடிப்படையில் விஜய் பாபுவை செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜய் பாபுமீது நடிகர்கள் சங்கமான அம்மா முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மலையாள நடிகர் சங்கத்தில் இண்டானல் கம்ப்ளெயிண்ட் கமிட்டி தலைவராக இருந்த நடிகை ஸ்வேதா மேனன், அதில் உறுப்பினர்களாக இருந்த நடிகைகள் குக்கூ பரமேஸ்வரன், மாலா பார்வதி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 5 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ள கம்ப்ளெயிண்ட் கமிட்டியில் வழக்கறிஞர் அனகா மற்றும் ரசன நாராயணன்குட்டி ஆகிய உறுப்பினர்கள் மட்டுமே மீதம் உள்ளனர்.
நடிகர் சங்கத்தின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நடிகையும் அதிருப்தி அடைந்துள்ளார். "பெற்ற தாயை தவிர வேறு யாரையும் நம்ப கூடாது" என பாதிக்கப்பட்ட நடிகை கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ஹரீஷ் பேரடி தன்னை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும்படி முகநூல் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் ஹரீஷ் பேரடி கூறுகையில், "பொது சமூகம் ஏற்றுக்கொள்ளாத கிரிமினல்களைப் பாதுகாக்கின்ற, பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அம்மா என்ற சினிமா சங்கத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து என்னை நீக்க வேண்டும்" என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அடிப்படை உறுப்பினராக இணைய நான் செலுத்திய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை நீங்கள் தர வேண்டாம். மெடிக்கல் இன்சூரன்ஸ் தொடங்கி அனைத்தில் இருந்தும் என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். பிரபல நடிகை ஒருவரை காரில் கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், நடிகர் திலீபுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நடிகர் சங்கம் மீது புகார் எழுந்தது. இந்த நிலையில் விஜய் பாபு மீதான பாலியல் புகாரிலும் மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கத்துக்கு எதிராக நடிகைகள் அதிருப்தி தெரிவித்திருப்பது சர்ச்சை ஆகி உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/ItGwoJT
0 Comments