ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் மகனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில், தந்தை கொண்டு சென்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஏப்ரல் 25-ம் தேதி திருப்பதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் இதே போன்ற சம்பவம் நடந்தது. சடலத்தைக் கொண்டு செல்ல அதிக பணம் கேட்டதால், 10 வயது மகனின் சடலத்தை தந்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 10 நாள்களுக்குள்ளே இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது. தந்தை தன் மகனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மற்றுமொரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஸ்ரீராம் மற்றும் ஈஸ்வர் என்ற இரண்டு சிறுவர்கள் புதன்கிழமையன்று கனிகிரி கால்வாயில் தவறி வீழ்ந்து மூழ்கி இறந்தனர். கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட ஈஸ்வரின் உடலை உறவினர்கள் நேரடியாக வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
ஸ்ரீராமை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்ற போது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடலை எடுத்துச் செல்ல இலவசமாக இயக்கப்படும் ஆம்புலன்ஸை அழைத்தபோது, ஓட்டுநர், அதற்கு விதியில் இடமில்லை என்று சொல்லி வர மறுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் இருசக்கர வாகனத்திலேயே சடலத்தை வீடு வரை கொண்டு வந்துள்ளனர். நெல்லூரில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி தன் மடியில் 8 வயதுச் சிறுவனின் உடலை வைத்துக்கொண்டு வந்த சம்பவத்தின் வீடியோ, வியாழன் அன்று வைரல் ஆனதைத் தொடர்ந்து, பொறுப்பின்றி நடந்துகொண்ட மருத்துவமனை நிர்வாகத்தையும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் பலரும் கண்டித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/CD0imTu
0 Comments