கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகாவில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால், ``அரசியலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் டெல்லி சென்று சோனியா, நட்டாவை சந்திக்க வைக்கிறோம் என்றும் கூறுவர். அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.தேர்தல் நெருங்கும் போது இத்தகைய மோசடிகள் ஆரம்பமாகும். இத்தகையோரை நம்பி அரசியல் வாழ்க்கையை பாழ் செய்து கொள்ள வேண்டாம்.
ஒருமுறை என்னிடமும் 2,500 கோடி கொடுத்தால் என்னையும் முதல்வராக்குகிறோம் என்று கூறினார்கள். எனக்கோ 2,500 கோடி என்றால் எவ்வளவு பணம்? இந்தப் பணத்தை எங்கே வைத்திருப்பார்கள்? என்றே சிந்திக்கிறேன். எனவே முதல்வர் பதவிக்கு டிக்கெட் வழங்கும் இந்த ஏஜென்டுகள் ஒரு பெரிய மோசடி கும்பல்" எனப் பேசினார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் கருத்துகளுக்கு பதிலளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பதிவில், "யத்னாலின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் இது தேசிய பிரச்னை, இது குறித்து நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும். உயர் பதவியைப் பெறுவதற்காக பெரும் தொகையைக் கேட்ட ஏஜெண்டுகள் இருப்பதாக வரும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/kxsmqwY
0 Comments