கூட்டு சிறார் வதைக்கு ஆளான 13 வயது சிறுமி, அது குறித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனக் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, காவலராலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லலித்பூரில் வசித்து வரும் 13 வயது சிறுமியை ஏப்ரல் 22 அன்று சந்தன், ராஜ்பான், ஹரிசங்கர் மற்றும் மகேந்திர சௌராசியா ஆகிய நான்கு பேரும் போபாலுக்கு அழைத்துச் சென்று நான்கு நாள்களாகக் கூட்டு சிறார் வதை செய்தனர். பின்னர் சிறுமியை அவரின் கிராமத்தில், காவல் நிலையத்துக்குப் பின்புறம் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்தப் புகார் குறித்து சிறுமியின் வாக்குமூலத்தை வாங்க வேண்டும் எனக் கூறி, மறுநாள் சிறுமியை அழைத்து வரச் சொல்லி அச்சிறுமியின் அத்தையிடம் சொல்லப்பட்டுள்ளது. பெற்றோரிடம் தெரிவிக்காமல், சிறுமியைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார் அவர். அங்கு இருந்த காவல்துறை அதிகாரி திலக்தாரி சரோஜ், சிறுமியைத் தனி அறைக்குள் அழைத்துச் சென்று சிறார் வதை செய்திருக்கிறார்.
மறுநாள், சிறுமி மீண்டும் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அச்சிறுமியிடம் அந்தத் தொண்டு நிறுவனத்தினர் விசாரித்தபோது, காவலராலேயே அவருக்கு வன்கொடுமை நிகழ்ந்தது தெரிய வந்தது. இந்த விவரங்களை அந்நிறுவனம், லலித்பூர் காவல்துறை தலைமை அதிகாரியான நிகில் பதக்கிடம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் தலைமறைவாக, தனிப்படை அமைத்து இப்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், மற்ற மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுமியின் அத்தை மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/16nRj9r
0 Comments