ம.பி: செல்போனை திருடிச்சென்ற நபர்... துரத்திச் சென்ற பள்ளி ஆசிரியர் ரயிலில் அடிபட்டு பலியான சோகம்

மத்தியப் பிரதேச ரயில் நிலையத்தில் தனது செல்போனை திருடிச்சென்ற திருடனை பிடிக்க சென்ற ஓடிச் சென்ற ஆசிரியர் ஒருவர், ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், ``மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் 54 வயது பள்ளி ஆசிரியர் மனோஜ் நேமா என்பவர், இரவு துர்க்-அஜ்மீர் ரயிலில் சாகருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது தெரிந்தவர்களுக்கு போன் செய்ய வேண்டும் என மனோஜ் நேமாவிடம் அவரின் போனைக் கேட்டதாக தெரிகிறது. ரயில் மெதுவாகச் சென்றபோது, அந்த மர்மநபர் போனை எடுத்துக்கொண்டு ஓடி முயன்றிருக்கிறார்.

ஸ்மார்ட் போன்

தனது போனை எடுத்துச் சென்ற நபரை துரத்திச் சென்ற பள்ளி ஆசிரியர் ரயில் பாதையில் நழுவி விழுந்துள்ளார். அப்போது ரயிலில் அடிப்பட்டு கடுமையான காயத்துடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளி ஆசிரியர் நேமா தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாதோல் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்றார்.

பின்னர் சந்தேகத்தின் அடைப்படையில் போலீஸார் ஷாஹ்டோலில் உள்ள கெரி கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திர சிங் எனரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு போனை மீட்டெடுத்தனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/tq1ObKT

Post a Comment

0 Comments