பெரும்பாலான நடிகர்கள்/நடிகைகள் முகத்தைத் திருத்தமாக மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். பெங்களூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் 'கொழுப்பு நீக்க' (Fat Free) முக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சேத்தனா ராஜ் என்கிற 21 வயது நடிகை மரணமடைந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேத்தனா ராஜ் சீரியல்களில் நடித்து வருபவர். மே 16 காலை பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார். மாலை நேரத்தில் அவரின் நுரையீரலில் நீர் கோத்து நிலைமை மோசமானதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறுவை சிகிச்சை பற்றி தனது பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் நண்பர்களுடன் சேத்தனா சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவரின் பெற்றோர்கள், மருத்துவமனைதான் இறப்புக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்தத் தனியார் மருத்துவமனை பேரில் இது தொடர்பாக வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. சேத்தனா ராஜ், 'கீதா', 'Doresani' போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/JGSr6Um
0 Comments