செய்தி வெளியீடு எண் : 749 நாள்: 11.05.2022
மாண்புமிகு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி.கீதா ஜீவன் அவர்கள்
இன்று (11.05.2022) மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையை துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி
வரும் சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள்
நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான
மூன்று நாள் பயிற்சிப் பட்டறை (II Batch) இன்று (11.05.2022) சென்னை எழும்பூரில்
உள்ள ஹோட்டல் ரமடாவில் துவங்கி நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையில் சிறப்பு
விருந்தினராக மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.
பி.கீதா ஜீவன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிப் பட்டறையை துவக்கி வைத்து
சிறப்புரையாற்றினார்.
அப்போது
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர்கள் மற்றும்
உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும், புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்பதையும், திறம்படவும்,
நேர்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை
வழங்கினார்.
இந்நிகழ்வில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.
ஷம்பு கல்லோலிக்கர், இ.ஆ.ப., சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் திருமதி ச.வளர்மதி,
இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
*******
0 Comments