இந்துத்துவ அமைப்பினரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரி; நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேர்வு!

கர்நாடகாவைச் சேர்ந்த பழ வியாபாரி நபிசாப் கில்லேடர். இந்துத்துவா அமைப்பினரால் இவரது பழ வண்டி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் செய்திகளில் இவர் பெயர் அடிபட்டது. இந்நிலையில், 8-வது மே சாகித்ய மேளாவின் ஆண்டு விழாவைத் தொடங்கிவைக்க நபிசாப் கில்லேடர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா பழ வியாபாரி

ஏப்ரல் மாதம் இஸ்லாமியரான நபிசாப் கில்லேடர், தார்வாடில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு வெளியே தர்பூசணி பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது கோவில் வளாகத்தில் இந்து அல்லாத நபர்களை அனுமதிக்கக் கூடாது என்று, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த 10 பேர் நபிசாபின் வண்டியை உடைத்து, விற்பனைக்கு வைத்திருந்த பழங்களைச் சேதப்படுத்திச் சென்றனர். அவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக ஊடகத்தில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் தாவண்கரே நகரில் மே 27 முதல் 28 வரை நடைபெறவுள்ள 8-வது மே சாகித்ய மேளாவின் ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்க நபிசாப் கில்லேடர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து குரல் கொடுப்பதற்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டதே இந்நிகழ்வு.

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிகழ்ச்சியில் இவரை தவிர, கட்டுமான தொழிலாளி, பீடி சுற்றும் தொழிலாளி, விவசாயி என ஐந்து பேர் மே சாகித்ய மேளாவைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி தாவண்கரேயில் உள்ள தாஜ் பேலஸில் நடைபெற உள்ளது. சம காலத்தில் நடந்துவரும் பிரச்னைகள் குறித்து சிறப்புரை ஆற்ற பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு சிறப்புரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/Y23qNXP

Post a Comment

0 Comments