உத்தரப்பிரதேச மாநிலம் , சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கைராபாத் என்ற இடத்தில், மசூதிக்கு வெளியே, அங்கிருந்த பொது மக்களிடையே பஜ்ரங் முனி தாஸ் என்ற சாமியார் ஒருவர் ஜீப்பில் பேசியபடி வந்தார். அப்போது பேசிய அவர், ``ஒரு இந்து பெண்ணை கிண்டல் செய்தால், முஸ்லிம் பெண்களைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வேன்'' என்று மிரட்டியதாகக் கூறப்பட்டது. இவரின் பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
TRIGGER WARNING!
— Mohammed Zubair (@zoo_bear) April 7, 2022
A Mahant in front of a Masjid in the presence of Police personals warns that He would K!dnap Muslim Women and ₹@pe them in Open.
According to the locals near Sheshe wali Masjid, Khairabad, Sitapur. This happened on 2nd Apr 2022, 2 PM. @sitapurpolice @Uppolice pic.twitter.com/wkBNLnqUW0
இந்த வீடியோவைப் பகிர்ந்து ஆல்ட்நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபை தனது டிவிட்டர் பக்கத்தில், ``இந்த வீடியோ ஏப்ரல் 2-ம் தேதி எடுக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் ஐந்து நாள்களுக்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' எனப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பெண்களுக்கு வெளிப்படையாக பாலியல் மிரட்டல் விடுத்த பஜ்ரங் முனி தாஸ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த சாமியாரைக் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/2UFgTVb
0 Comments