உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் காணாமல் போன சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 5-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கோட்வாலி பகுதி காவல்நிலையத்தில், 13 வயது சிறுமி ஒருவர் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மூவர் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டு 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆசாராம் பாபுவின் ஆசிரமத்துக்கு வெளியில் நிற்கும் காரிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, ஆசிரமத்தின் வாட்ச்மேன் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அந்த காரை பரிசோதித்ததில் காரின் உள்ளே காணாமல் போன 13 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஆசிரம ஊழியர் ஒருவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர். தடயவியல் குழுவும் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோண்டா காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் மிஸ்ரா, ``காவல்துறை ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்குச் சீல் வைத்துள்ளனர். கொலைக்குப் பிறகு சடலம் காரில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது." எனக் கூறியுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Rmd8eUS
0 Comments