உத்தரப்பிரதேசத்தில் தன் சொந்த தொகுதியான பிலிபிட்-ல் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பா.ஜ.க எம்.பி வருண்காந்தி, ஒரு கூட்டத்தில் பேசுகையில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து தன சொந்த கட்சியான பா.ஜ.க மீதே கேள்வியெழுப்பியுள்ளார்.
பிலிபிட்டில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருண்காந்தி, ``இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். நாட்டில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந்தும், இளைஞர்கள் வேலையில்லாமல் வெறும் வயிற்றோடு அலைகின்றனர். வாக்குறுதியளித்தபடி, 2 கோடி வேலைவாய்ப்புகளும் இன்னும் வழங்கப்படவில்லை. கோடிக்கணக்கான வேலையில்லாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என சொன்னதும் இன்னும் நடக்கவில்லை.
எங்களின் போராட்டம் என்பது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கானது. எல்லோருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதையே நம் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டமே நமது நாட்டின் உண்மையான போராட்டம். அனைவருடனும் இணைந்து பணியாற்றும்போது இது சாத்தியமாகும்" என்று கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/41zPK3o
0 Comments