கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை அந்த நபரைக் கைது செய்துள்ளது.
இந்த நிலையில், அவர் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையில் திருப்தியடையாததால், நள்ளிரவில் கும்பல் ஒன்று கர்நாடகா மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 12 காவலர்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கும்பலை தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்த காவல்துறை, இந்தச் சம்பவம் தொடர்பாக 40 பேரைக் கைது செய்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை ஆணையர் லாபு ராம், ``நள்ளிரவில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தாக்குதலில் 12 காவலர்கள் காயமடைந்துள்ளனர். சில காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காவலர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். இனியும் இது போல நடக்காமல் இருக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனக் கூறியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/NZgDM59
0 Comments