பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டம்... விரைவில் மும்பையில் நடத்த திட்டம்?!

நாட்டில் பாஜக அல்லாத முதல்வர்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலே இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் தோல்வி அடைந்துவிட்டதால் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் பலம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து வருகின்றன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்ற தலைவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மம்தா பானர்ஜி இதற்காக ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி

இந்நிலையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கூட்டத்தை மும்பையில் கூட்டி முக்கிய ஆலோசனை நடத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக பாஜக அல்லாத அனைத்து முதல்வர்களுக்கும் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ``மும்பையில் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயும் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.

மும்பையில் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட முயற்சிகள் நடக்கிறது. இக்கூட்டத்தில் மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, வேலையில்லா திண்டாட்டம், மத வன்முறையை பரப்ப நடக்கும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வாக்காளர்களை கவர அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தின. மகாராஷ்டிராவில் இந்து ஒவைசி(ராஜ்தாக்கரே) அனுமன் ஜெயந்தியின்போது அமைதியை சீர்குலைக்க முயன்றார்” என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் தான் அதிகப்படியாக அமலாக்கப்பிரிவும், சிபிஐயும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/gEc1Gqy

Post a Comment

0 Comments