கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரெஜிலால். இவருக்கும் கனிகா என்பவருக்கும் கடந்த மார்ச் 14-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதை அடுத்து புதுமண தம்பதியினர், குட்டியாடி ஆற்றில் போட்டோஷூட் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். இதனால் அவருடைய உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது விதவிதமாக செல்ஃபி எடுக்க முயன்ற அவர்கள், அருகிலிருந்த பாறை மீது ஏறி நின்றபோது, இருவரும் தவறுதலாக வழுக்கி விழுந்தனர். இதில் ரெஜிலாலுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால், அவர் சம்பவ இடத்திலேயே மூழ்கி உயிரிழந்தார். அவரின் மனைவி கனிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இது குறித்து பெருவண்ணாமுழி காவல்துறை கூறும் போது, ``குட்டியாடி ஆறு பகுதிகளில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் மரணமடைந்து வருகின்றனர். பல சுற்றுலாப் பயணிகள் தண்ணீருக்கு அடியில் இருக்கும் குழிகளை அறியாமல் இறங்கிவிடுகின்றனர். மேலும் ரெஜில் மரணம் குறித்து விசாரிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளனர். திருமணமாகி 1 மாதம் கூட ஆகாத புதுமணத் தம்பதிகளுக்கு நடந்த இந்த சோகமான நிகழ்வு, கேரள மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/bhrSkXc
0 Comments