உ.பி: `மதுவின் 5-வது மகள்' - ஆதார் பிழையால் தடைபட்ட பள்ளி சேர்க்கை - உதவிய முதல்வர் அலுவலகம்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தினேஷ் என்பவர் தன் மகளை அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கச் சென்றிருக்கிறார். அப்போது, ``உங்கள் மகளின் ஆதார் அட்டையில் பெயர் `மது கா பஞ்ச்வா பச்சா'(மதுவின் ஐந்தாவது மகள்) என்று இருப்பதால், பெயர் திருத்தும் செய்த பிறகுதான் பள்ளியில் சேர்க்க முடியும்" என்று கூறி ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தினேஷின் மனைவி மது ஊடகங்களிடம், ``என் மகளின் ஆதார் அட்டையில் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை. மேலும் ஆசிரியர்கள் சிலர் அவளை கேலி செய்தார்கள்" என்று கூறியிருந்தார்.

பள்ளி சிறுவர்கள்

இந்த செய்தியறிந்த, உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``புடான் மாவட்டம் ராய்பூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், தன் மகள் ஆர்த்தியை பள்ளியில் சேர்க்கச் சென்றார். ஆர்த்தியின் ஆதார் அட்டையில், 'மது கா பஞ்ச்வா பச்சா' என எழுதப்பட்டிருந்ததால், பள்ளியில் சேர்க்கவில்லை. இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து, சிறுமியை உடனடியாகப் பள்ளியில் சேர்க்க, பள்ளிக்கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்த்தி பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது ஆதார் அட்டையில் உள்ள பிழையும் சரி செய்யப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/MIoCtTL

Post a Comment

0 Comments