`கை இல்லாத நான் எப்படி கல்லெறிய முடியும்?' - மத்திய பிரதேச மதக்கலவரம்; கடை இடிக்கப்பட்டவர் கண்ணீர்

மத்தியப் பிரதேசம், கார்கோன் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீச்சு மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, இரண்டு கைகள் இல்லாத மற்றும் கால் மெலிந்த வாசிம் ஷேக் என்பவரின் கடையை இடித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம், கார்கோன் பகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக ஊர்வலம் சென்றபோது அங்குள்ளவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தின் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் மதக்கலவரமாக மாற, பல வீடுகள் எரிக்கப்பட்டன. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை

வன்முறைக்கு அடுத்த நாள் ஏப்ரல் 11-ம் தேதி, மத்திய பிரதேச அரசு கார்கோனில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் மற்றும் கடைகளை புல்டோசர் வைத்து தகர்த்தது. அந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்தான், வாசிம் ஷேக். ஆனால் இவருக்கு இரண்டு கைகளும் இல்லை. இவர் கலவரத்தில் கல் எரிந்ததாகக் குற்றம் சாட்டி, கடையை இடித்துள்ளனர்.

இது குறித்து வாசிம் ஷேக் கூறுகையில், ''12 ஆண்டுகளாக கடையை நடத்தி வருகிறேன். என் வாழ்வாதாரமே இந்தக் கடைதான். என்னை நம்பி வயதான தாயும், குழந்தைகளும் உள்ளனர். சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் கூட எனக்கு உதவி தேவைப்படும். இந்நிலையில், கை இல்லாத நான் எப்படி கல்லெறிய முடியும்?'' எனக் கண்ணீருடன் கேட்டுள்ளார்.

வீடுகள் இடிப்பு

இரண்டு கைகளும் இல்லாத ஒருவரை கல் எரிந்ததாகக் குற்றம் சாட்டி, மாநில அரசு அவர் கடையை இடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/pYComBu

Post a Comment

0 Comments