லக்னோவில் உள்ள முஷாஹிகஞ்ச் பகுதியில் மொகமத் ஹைதர் என்ற 8 வயது சிறுவனும், அவனின் 5 வயது சகோதரி ஜன்னத்தும் தங்களது வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த தெருவில் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய்கள் சிறுவர்கள் இரண்டு பேரையும் விரட்டி விரட்டி கடித்தன. இதனால் சிறுவர்கள் கூச்சலிட்டு உதவிகேட்டன. இதில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களையும் தெருநாய்களிடமிருந்து மீட்டு அவர்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் 8 வயது சிறுவன் சிகிச்சைப் பலனலிக்காமல் இறந்து போனான். சிறுவனின் சகோதரி தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறாள். இந்தச் சம்பவத்தால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பினர்.
தெருநாய்கள் சேர்ந்து சிறுவனைக் கடித்து கொலை செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அதிக தெருநாய்கள் இருப்பதாகவும், அவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மாநகராட்சியில் பலமுறை முகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நாய்க் கடியில் உயிரிழந்த சிறுவனின் தந்தை ஹைதர் குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக அவர் போலீஸில் புகார் செய்துள்ளார். மாநகராட்சி அதிகாரி, மேயர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து லக்னோ மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடித்து சென்று இனப்பெருக்க அறுவை சிகிச்சை செய்யும் பணியை தீவிரப்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/wupymk4
0 Comments