ஜே.கே வங்கிக் கட்டட விவகாரம்: உமர் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவிடம், அமலாக்க இயக்குநரகம் இன்று புதுதில்லியில் விசாரணை நடத்தியது. 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவிடம், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஜே-கே வங்கி கட்டடம் வாங்கியது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் இன்று விசாரணை நடத்துவதற்காக அழைத்திருந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்த விசாரணை அரசியல் இயல்புடையது என்றாலும், உமர் அப்துல்லா தனது தரப்பில் எந்த தவறும் இல்லை என்பதால் அதற்கு ஒத்துழைப்பார்" எனப் பதிந்திருந்தது.

உமர் அப்துல்லா

அதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் மத்திய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்திற்கு உமர் அப்துல்லா வந்தார். அவர் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் வாக்குமூலம் அளித்தார். மேலும், அது அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை குறித்து தேசிய மாநாட்டுச் செய்தித் தொடர்பாளர், ``5 ஆகஸ்ட் 2019-க்கு முன்பு தொடங்கிய `தீய அவதூறு பிரசாரத்தின்' மற்றொரு நகர்வு இந்த விசாரணை. 

ஆனாலும், விசாரணையில் ஆஜராக வேண்டும் என்ற அடிப்படையில் உமர் அப்துல்லா இன்று டெல்லிக்கு வந்துள்ளார். இந்த விசாரணை அரசியல் இயல்புடையது என்றாலும், அவர் எந்த தவறும் செய்யாததால் அவர் ஒத்துழைப்பார் என்று கூறியது. அதன் காரணமாகவும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பளித்தார்" எனக் கூறியுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/LjqF6BV

Post a Comment

0 Comments