சித்தூர், பலமனேரில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோடா விற்பவரின் மகளான மிஸ்பா பாத்திமா என்ற மாணவி, கங்காவரத்தில் உள்ள பிரம்மரிஷி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். மிஸ்பா படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் காரணமில்லாமல் கல்வி ஆண்டு முடிவதற்கு சில நாள்களுக்கு முன்பு மிஸ்பாவிற்கு மாற்றுச் சான்றிதழைக் (டிசி) கொடுத்துள்ளார்.
இவரின் இந்தச் செயலே மிஸ்பாவின் தற்கொலைக்கு காரணம் என அவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து, பள்ளி முதல்வரான ரமேஷ் வியாழக்கிழமை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை பலமனேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 306, 506-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் சிறுமியின் தற்கொலை கடிதம் கிடைத்த நிலையில், அக்கடிதம் பல உண்மைகளைக் கட்டவிழ்த்துள்ளது. அதாவது தன் வகுப்புத் தோழியின் தந்தை, தன் மகள் வகுப்பில் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக, மிஸ்பாவை பள்ளியிலிருந்து நீக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தை ஆளும் கட்சித் தலைவர் என்பதால் காவல்துறையும் மெத்தனமாகச் செயல்படுவதாக மிஸ்பாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தற்கொலைக்கு காரணம் ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்தான் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் நாரா லோகேஷ் குற்றம்சாட்டியுள்ளார். எந்தத் தவறும் செய்யாத சிறுமியை பள்ளியில் இருந்து நீக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/HWMGJRe
0 Comments