உத்தரப்பிரதேசம் முசாபர் நகரை சேர்ந்தவர் திஷா சாலியன். கடந்த புதன் கிழமை தனது மாமியார் வீட்டிலிருந்து மனைவியுடன் தனது கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட குழு அவர்களை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் தம்பதியரை மிரட்டி அருகில் இருந்த மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே கணவனான திஷா சாலியனை மாமரத்தில் கட்டி வைத்து அவர் கண் முன்னாலேயே 4 பேர் மாறி மாறி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதற்குப்பின் அங்கிருந்து உயிர் தப்பிய திஷா சாலியன் அவரின் மனைவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இதைத் தொடர்ந்து தனக்கு நடந்த கொடூரத்தை வியாழன் அன்று நியூ மண்டி காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் அதிகாரி எஸ்.பி அர்பித் விஜயவர்கியா, "திஷா சாலியனின் புகாரின் அடிப்படையில் இரண்டு சிறார்கள் உட்படக் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார், மேலும் அவரின் வாக்குமூலம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 164 -ன் கீழ் நீதிபதி முன் பதிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு திஷா சாலியன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/mKfoHQe
0 Comments