அந்திராவின் கடப்பா மாவட்டத்தின் பொதட்டூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் பிரசவ வலியால் அவதியுற்றிருந்த நிலையில், பிரசவம் பார்ப்பதற்கு லஞ்சமாக மருத்துவமனை ஊழியர்கள் 2,000 ரூபாய் கேட்டுள்ளனர். வறுமையில் சிக்கித் தவித்து வந்த அந்தப் பெண், 2,000 ரூபாய் லஞ்சம் தர இயலாத சூழ்நிலையில் இருந்துள்ளார். அவரது சூழ்நிலையை மருத்துவமனை ஊழியர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே, இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
லஞ்சமாகக் கேட்ட 2,000 ரூபாய் பணத்தை இளம்பெண் தர மறுத்ததால், மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கும், அவருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தன் கணவருக்கும் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்ணின் உறவினர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் இளம்பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதற்கான சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன் ஆர்ப்பார்ட்டத்தில் ஈட்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மருத்துவமனை சூப்பிரண்டண்டன்ட் டேவிட் செல்வராஜ் மற்றும் போலீஸார் இளம்பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், மருத்துவமனை ஊழியர்களிடம் போலீஸாரும் சூப்பிரண்டண்டன்ட் டேவிட் செல்வராஜூம் நடத்திய விசாரணையில், பொய் கூறியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து இளம்பெண் தரப்பில் போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுக்காததால் இளம்பெண் மற்றும் அவரின் பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதாக அரசு மருத்துவமனை ஊழியர்கள் கூறிய இந்த விவகாரம், ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/8S4p0dn
0 Comments