மேக்கேதாட்டு: ``என்று முடியும் இந்த காவிரி போராட்டம்?” - தனித்தீர்மானத்தை கொண்டு வந்த துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர், ``என்று தனியும் இந்த சுந்திர தாகம் என்று பாரதி பாடியது போல், என்று முடியும் இந்த காவிரி போராட்டம்? என்ற வேதனையோடு மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தனித்தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக கொண்டு வருகிறேன். இந்த பிரச்னை மகன், பேரன், கொள்ளுப்பேரன் என போகுமோ என்று பார்க்கிறேன்.

தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் ஓடினாலும் நாம் தண்ணீருக்காகக் கையேந்தும் நிலையில் இருக்கிறோம். `நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்’ என இந்த நேரத்தில் பேச வேண்டாம். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறுவது அடாவடித்தனம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு மாநில அரசாங்கம் ஏற்கவில்லை என்றால், இங்கே கூட்டாட்சி தத்துவம் எங்கே இருக்கிறது. அண்டை மாநிலத்துடன் நல்லுறவைப் பேணி காக்கும், அதே நேரத்தில் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. மத்தியில் யார் ஆட்சியிலிருந்தாலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனதுடன் நடத்துகின்றனர். தமிழகத்திற்கான உரிமையை நாம் போராடி மீட்க வேண்டும். அப்படி மீட்காவிட்டால் வரும் தலைமுறையினர் நம்மைச் சபித்து விடுவார்கள்'' என்றார்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்

அதன் பிறகு மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அந்தத் தனித்தீர்மானத்தை வாசித்தார். ``எந்த அனுமதியும் இன்றி தன்னிச்சையாக மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் செயலுக்குத் தமிழக சட்டப்பேரவை கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது. மேக்கேதாட்டு திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் ஒன்றிய அரசு வழங்கக் கூடாது” எனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீர்மானம்
தீர்மானம்

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு தமிழ்நாடு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். தொடர்ந்து அனைத்து கட்சியின் ஆதரவுடன் மேக்கேதாட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3Ul8qwn

Post a Comment

0 Comments