கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த சுனில் கோபி என்பவர், மதுக்கரை அருகே உள்ள 4.5 ஏக்கர் நிலத்தை விற்பது தொடர்பாக கிரிதரனை அணுகியுள்ளார்.
இதில் இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டு, கிரிதரன் ரூ.97 லட்சத்தை முன்பணமாக சுனிலின் உறவினர்கள் ரீனா, சிவதாஸ் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் பத்திரப்பதிவும் செய்துள்ளனர்.
இதனிடையே, கிரிதரன் அந்த நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பார்த்தபோது அதில் வில்லங்கம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. அதை மறைத்து நிலத்தை விற்றதால்,
அதிர்ச்சியடைந்த கிரிதரன் சுனிலிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கமாறு கேட்டுள்ளார். முதலில் ஒப்புக் கொண்ட சுனில், பிறகு பணத்தை கொடுக்க முடியாது என்று கிரிதரனை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, கிரிதரன் கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, கோழிக்கோடு பகுதியில் வைத்து சுனில் கோபியை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள ரீனா, சிவதாஸையும் தேடி வருகின்றனர். கைதான சுனில் கோபி, கேரளா நடிகரும், பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபியின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/XRMjxNr
0 Comments