``மோடிக்கு பிறகு பாஜக பலம் இழக்கும்; காங்கிரஸ் மட்டுமே நிலைத்திருக்கும்!" - வீரப்ப மொய்லி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைடைந்ததிலிருந்து, கட்சிக்குள் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும், காங்கிரஸ் தோல்வியடைந்த 5 மாநிலங்களிலும், மாநில தலைவர்கள் பதவியை காங்கிரஸ் ராஜினாமா செய்ய வைத்தது கவனிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடந்த சில தினங்களில் காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டமும், காங்கிரஸ் G-23 தலைவர்கள் கூட்டமும் தனித்தனியே நடைபெற்றது. இதுபோக, காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமைக்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்துவருகின்றன.

பிரதமர் மோடி

இந்த நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி, காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பெங்களூருவில் நேற்று பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் காங்கிரஸ் தலைமையின் மேல் அதிருப்தியில் இருக்கும் ஜி23 தலைவர்கள் குறித்து பேசினார், "எதைச் செய்தாலும் கட்சி மன்றத்தில்தான் செய்ய வேண்டும். கட்சியை சீர்திருத்தம் செய்யவேண்டும் என அவர்கள் கட்சிக்குள் மனு அளித்து வருகின்றனர். கட்சித் தலைமையுடன் அவர்கள் அதை விவாதிக்க வேண்டும். நான் அவர்களுடன் தொடர்பில் இல்லை. அதேசமயம் அவர்கள் ஜி-23 ஐ நிறுவனமாக்கக் கூடாது.

சிலர் காங்கிரஸை விமர்சிக்கிறார்கள். நாம் ஆட்சியில் இல்லை என்பதற்காக காங்கிரஸ் தலைவர்களோ அல்லது தொண்டர்களோ யாரும் அச்சப்பட வேண்டாம். பா.ஜ.க மற்றும் பிற கட்சிகள் போக்குவரத்து பயணிகள் போல, அவர்கள் வருவார்கள் போவார்கள். பா.ஜ.க ஒரு நிரந்தரக் கட்சியாக இருக்க முடியாது. மோடிக்கு பிறகு அரசியலின் கொந்தளிப்பை பா.ஜ.க தாங்காது. காங்கிரஸ் மட்டுமே இங்கு நிலைத்திருக்கும்" என கூறியிருந்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/oLNXpiK

Post a Comment

0 Comments