சொத்து பிரச்னை: மகன், மருமகள், பேத்திகளை வீட்டோடு கொளுத்திய முதியவர்- நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்

கேரள மாநிலத்தில் சொத்து தகராரில் தனது மகன் மற்றும் அவரின் குடும்பத்தை வீட்டோடு கொளுத்தி படுகொலை செய்த சம்பவம் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கியில் வசித்து வந்தவர் ஹமீது (79). இவருக்கும் இவரின் மகனுக்குமிடையே அடிக்கடி சொத்து தொடர்பான வாக்குவாதம் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விரக்தியடைந்த முதியவர் ஹமீது தன் மகனையும் அவரின் குடும்பத்தையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

கொலை

இந்த திட்டம் தொடர்பாகக் கேரள காவல்துறை கூறுகையில், "முதியவர் ஹமீது இன்று அதிகாலை வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மகன், மருமகள் மற்றும் பள்ளியில் பயிலும் 2 பேத்திகளையும் வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டார். மேலும், வீட்டுக்குள்ளிருந்து தீயை அணைக்க முயற்சிக்க கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியை காலி செய்துள்ளார்.

பக்கத்து வீட்டார்களின் கிணற்றில் இருந்த வாளி, கயிற்றைக்கூட அப்புறப்படுத்தியுள்ளார். அதன் பின்பு ஐந்து பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி வீட்டின் ஜன்னல் வழியே வீசி அதன் பின் தீ பற்றவைத்துள்ளார். கடுமையான தீயினால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும், ஹமீத் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீட்டிற்குள் வீசுவதைக் கண்டதாக அண்டை வீட்டாரில் ஒருவர் கூறினார்.

தீ வைத்து எரிப்பு

அதன் அடிப்படியில் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். இது நன்கு திட்டமிடப்பட்ட கொலையாகும், தந்தை மற்றும் இளைய மகளின் கருகிய உடல்கள் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்தபடி வீட்டின் உள்ளே இருந்த காட்சி இதயத்தை ரணமாக்கியது.

மேலும், விசாரணை நடைமுறைகளுக்காகவும், பிரேதப் பரிசோதனைக்காகவும் அந்த இரு உடல்களையும் பிரிப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், ​​ஹமீத் தனது மகனுடன் ஏற்பட்ட குடும்பச் சொத்துக்காக இந்த கொடூரமான கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/UCs3ujN

Post a Comment

0 Comments