VIDEO: ஹோலி கொண்டாட்டம்... தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர் பலியான சோகம்

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான விழாக்களில் ஒன்று ஹோலி பண்டிகை. இந்த நாளில் சிறுவர், சிறுமியர்கள், நண்பர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் வண்ணப்பொடிகளை உடலில் பூசியும், ஒருவருக்கொருவர் மேலே வீசியும் களிப்படைவார்கள். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியில் நேற்று இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயதான கோபால் சோலங்கி என்ற இளைஞர் சற்று வித்தியாசமாக கையில் கத்தியுடன் தனது நான்கு நண்பர்களுடன் ஆனந்தமாக நடனமாடி கொண்டு இருந்தார்.

கோபால் சோலங்கி குடிபோதையில் தனது நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்த போது, தன்னை அறியாமலே தன்னைத்தானே நான்கு முறை கத்தியால் குத்திக்கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த சோலங்கியின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/7WkG8eI

Post a Comment

0 Comments