மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த ஜெய்காந்த் ஷா என்ற தொழிலதிபர் வெளியில் சென்று விட்டு தனது காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கார் சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் சென்ற போது சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்தது. அவரின் காருக்கு முன்னால் சிறிய இடம் கிடந்தது. அந்த இடத்தை நோக்கி ஷா தனது காரை நகர்த்தினார். அதே நேரத்தில் மற்றொரு கார் டிரைவரும் தனது காரை அதே இடத்திற்கு நகர்த்த முயன்றார். ஆனால் ஷா தனது காரை முன் நகர்த்தி சென்றார். அந்நேரம் அவரின் காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் டிரைவர் ஷாவின் காரை நிறுத்தும்படி சைகை செய்தார். ஷாவும் காரை நிறுத்தினார். உடனே அக்காரில் இருந்தவர் ஏன் காரை முன்நோக்கி கொண்டு வந்தாய் என்று கேட்டு கண்ட படி திட்ட ஆரம்பித்தனர். ஷா காரில் இருந்து இறங்கி வந்து தன் மீது எந்த வித தவறும் இல்லை என்று சொல்ல முயன்றார்.
ஆனால் அதனை கேட்காமல் காரில் இருந்த நபர் ஷாவை அடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஷா தான் போலீஸில் புகார் செய்யப்போவதாக கூறி அந்த கார் நம்பர் பிளேட்டை போட்டோ எடுத்தார். உடனே காரில் இருந்த நபர் ஷாவிடமிருந்து போனை பிடுங்கிக்கொண்டார். ஷா தனது போனை எடுக்க தனது தலையை கார் ஜன்னல் வழியாக உள்ளே விட்டார். உடனே காரில் இருந்தவர் காரை கிளப்பிவிட்டார். ஷாவின் பாதி உடல் காருக்கு வெளியில் தொங்கிய நிலையில் இருந்தது.
தன்னை விட்டுவிடும்படி ஷா கெஞ்சினார். ஆனால் காரில் இருந்த நபர் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஷாவை அப்படியே காரில் இழுத்து சென்றதோடு போனில் இருந்த போட்டோவை டெலிட் செய்துவிட்டு போனை தூக்கி வெளியில் போட்ட பிறகே ஷாவை வெளியில் தள்ளிவிட்டு கிளம்பினார். இதனால் ஷாவின் கால் உடைந்துள்ளது. அதோடு கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஷா ஆட்டோ பிடித்து தனது கார் நின்ற இடத்திற்கு சென்று தனது நண்பரை வரவழைத்து மருத்துவமனைக்கு சென்றார். அதோடு இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். அவரின் பெயர் ரவி என்று தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு பின் போலீஸார் அவரை விடுவித்துவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஷா அதிர்ச்சியடைந்துள்ளார்
from தேசிய செய்திகள் https://ift.tt/rct9S5R
0 Comments