கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர், பஜ்ரங் தள் அமைப்பின் செயற்பாட்டாளர் ஹர்ஷா(வயது 26). இவர் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டார். உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஹர்ஷா இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து அங்கு பல கலவரங்களும் வெடித்தன. உடனடியாக காவல்துறையினரும் கலவரத்தை ஒடுக்கும் பொருட்டு கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
மேலும் கலவரத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது அங்கு 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹர்ஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு காவல்துறையினரால் பாதுகாப்பாக ஹர்ஷாவின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் நேற்று இரவு முதல் நடத்திவரும் விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/7M1eEtB
0 Comments