மத்திய அமைச்சர் நாராயண் ரானே சமீபத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு விரைவில் அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் வரும் என்று தெரிவித்திருந்தார். அதோடு தாக்கரே தனது இல்லத்திற்கு அருகில் கட்டடம் கட்டியதில் விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். சிவசேனாவில் இருந்து வந்த வந்து பாஜகவில் சேர்ந்த நாராயண் ரானே தற்போது சிவசேனாவுடன் மோதிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரேயை மோசமாக விமர்சித்ததாக கூறி நாராயண் ரானேயை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்தனர். ஆனால் கைது செய்த அதே நாளில் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்.
சமீபத்தில் ரானேயின் மகனை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்து சில நாள்கள் போலீஸார் சிறையில் அடைத்தனர். தற்போது அமலாக்கப்பிரிவு விரைவில் தாக்கரேயிக்கு நோட்டீஸ் அனுப்பும் என்று ரானே சொன்னதை தொடர்ந்து, மும்பை ஜுவில் உள்ள ரானேயின் இல்லத்தில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், ரானே வீட்டில் கடற்கரையோர ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளை மீறி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் இரண்டு நாள்களுக்கு முன்பு, ரானே வீட்டில் சோதனை செய்வதற்காக மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். ஆனால் அன்று வீட்டில் ரானே இல்லை. இதையடுத்து இன்று மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் ரானே இல்லத்திற்கு சென்று சோதனை செய்தனர். இச்சோதனையை தொடர்ந்து ரானே இல்லத்திற்கு வெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
from தேசிய செய்திகள் https://ift.tt/uDZpTqB
0 Comments