உத்தரப்பிரதேசத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளதை அடுத்து, வரும் மார்ச் 3-ம் தேதி 6-வது கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``நான் மரணிக்க வேண்டும் என சில எதிரிகள் வாரணாசியில் சிறப்புப் பூஜை நடத்துகின்றனர். என் மரணத்திற்காக அவர்கள் வாரணாசியில் பிரார்த்தனை செய்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
அரசியலில் உள்ள சிலர் எப்படித் தரம் தாழ்ந்து செல்கின்றனர் என்பதை இது மாதிரியான செயல்கள் காட்டுகின்றன. நான் சாகும்வரை காசியை விட்டு வெளியே செல்லமாட்டேன்" என்றார்.
பிரதமரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/lOXb052
0 Comments