பிப்ரவரி மாதம் காதலர்களுக்கானது. 14 -ம் தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்பே வெவ்வேறு பெயர்களில் தங்கள் அன்பை பரிமாறி கொள்வார்கள். உணர்ச்சிபூர்வமான இந்தக் கலாசாரத்தில் சில வினோதங்களும் நடந்துவிடுகின்றன. கர்நாடக மாநிலம் மணிபால் பொறியியல் கல்லூரி விடுதியில் அப்படியான சம்பவம் நடந்திருக்கிறது. கல்லூரி மாணவர் தன் காதலியை சூட்கேஸ் பெட்டிக்குள் வைத்து விடுதிக்குள் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறார். போகிற வழியில் வார்டனிடம் சிக்கிக் கொண்டார்.
சூட்கேஸ் வெயிட்டாக இருக்குதே என்னப்பா எனக் கேட்ட போது ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியது என இளைஞர் பதிலளித்து இருக்கிறார். அப்போதே வார்ட்டனுக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கிவிட்டது. வார்டனின் கேள்விகளுக்கு இளைஞர் திணறி உளறிக் கொண்டிருந்த போது ‘என்னடா நடக்குது வெளியே’ என அந்தப் பெண் சூட்கேஸ் ஜிப்பைத் திறந்து கொண்டு வெளியே வந்துவிட்டார். அந்தப் பெண்ணும் அதே கல்லூரி தான். கையும் களவுமாக மாட்டிக் கொண்ட காதலர்கள் இருவரையும் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அனுப்பியதாக சொல்கிறார்கள். அந்தப் பெண் அடிப்படையில் ஒரு டான்ஸராம், அதான் உடலை குறுக்கிட்டு சூட்கேஸ்ல இருக்க முடிஞ்சுருக்கு. லவ் பண்றதா இருந்தா டான்ஸரை லவ் பண்ணுங்கனு சொல்ல மாட்டேன். மாட்டிக்காம பொய் சொல்லுங்க பாஸ்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Y6bldVi
0 Comments