ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் `இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஐந்து மாநில சட்டபேரவைத்தேர்தையொட்டி தேர்தல்களத்தில் பரபரப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கிதாரி பகுதியில் தேர்தல் பிரசாரம் முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பும் வழியில் அசாதுதீன் ஒவைசியின் காரை நோக்கி மர்ம நபர்கள் 4 முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் வந்த கார் பஞ்சர் ஆனதாகவும், அதன் பிறகு தான் பாதுகாப்பாக மற்றொரு காரில் திரும்பியதாகவும் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். போலீஸாரிடம் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை ஒவைசி அடையாளம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் `இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Also Read: அசாதுதீன் ஒவைசி வாகனம் மீது துப்பாக்கிச் சூடு?! - உ.பி-யில் பரபரப்பு!
from தேசிய செய்திகள் https://ift.tt/D7pTwfY
0 Comments