உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். யோகி ஆதித்யநாத் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பல தேர்தல்கள் நடந்திருந்தாலும், இந்தத் தேர்தல் மிகவும் தனித்துவமானது.
உத்தரப்பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டவும், தொடர் வளர்ச்சிக்காகவும் வரப்போகிற சட்டமன்றத் தேர்தல் தனித்துவமானதாக இருக்கும். இந்தத் தேர்தலின் மூலம் புதிய வரலாறு படைக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தை கலவரக்காரர்கள் மற்றும் மாஃபியாக்கள் திரைக்குப் பின்னால் இருந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பதை அனுமதிக்க மாட்டோம்.
பாஜக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டால் ஏழை, எளிய மக்களும், விவசாயிகளின் பயனடைந்துள்ளனர். சமாஜ்வாடி கட்சியும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் இதுவரை இந்த மாநிலத்திற்கு என்ன செய்தார்கள்? குடும்ப ஆட்சி நடத்தும் சமாஜ்வாடியினருக்கு வாய்ப்பு கிடைத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும்" என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிரட்டல்... கடிதத்துடன் இருந்த வெடிகுண்டு!
from தேசிய செய்திகள் https://ift.tt/IDh6f3b
0 Comments